மாதவரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து டி.வி, ரூ.35 ஆயிரம் திருட்டு


மாதவரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து டி.வி, ரூ.35 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 9 Dec 2017 4:30 AM IST (Updated: 9 Dec 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

மாதவரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து , டி.வி, ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர்உசேன் (வயது 40). மாதவரம், பொன்னியம்மன்மேடு சாஸ்திரிநகரில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டுஅதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த கேமரா, எல்.இ.டி டி.வி, மடிக்கணினி, ரூ.18 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜாகிர்உசேன் மாதவரம் போலீசில் புகார் செய்தார்.

மருந்து கடை

இதேபோல் ஜாகிர்உசேன் கடைக்கு எதிரில் பொன்னியம்மன்மேடை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், கடையில் இருந்த ரூ.17 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வராஜ் மாதவரம் போலீசில் புகார் செய்தார்.

இந்த 2 சம்பவத்தையும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story