புனேயில் சொத்து தகராறில் தாயை அடித்து கொன்றவர் கைது
புனேயில் சொத்து தகராறில் பெற்ற தாயை அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறு புனே ஏரன்டவ்னா கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அருணா சப்கால்(வயது70). இவரது மகன் ஆனந்த் (43). அருணாவின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி தரும்படி ஆ
புனே,
புனேயில் சொத்து தகராறில் பெற்ற தாயை அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறுபுனே ஏரன்டவ்னா கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அருணா சப்கால்(வயது70). இவரது மகன் ஆனந்த் (43). அருணாவின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி தரும்படி ஆனந்த் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த ஆனந்த் தாயிடம் சொத்து பத்திரங்களை கேட்டு தொந்தரவு செய்தார்.
ஆனால் அருணா அவற்றை கொடுக்க மறுத்தார். இதில், ஆத்திரமடைந்த ஆனந்த் அவரை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளார்.
மகன் கைதுஇதில், அருணா மயங்கி விழுந்தார். இதனால் பயந்துபோன ஆனந்த் சம்பவம் குறித்து அலங்கார் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அருணா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ஆனந்தை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆனந்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.