மயக்க மருந்து எனும் அற்புதம்!
‘அனஸ்தீசியா’ என்னும் மயக்கவியல் மருத்துவம், மருத்துவத் துறையில் ஒரு முக்கியப் பிரிவாகும்.

மயக்கமருந்து கண்டுபிடிப்பு, ஒரு நீண்ட வரலாறு கொண்டது.
நீண்ட நெடுங்காலம் முதலே, அறுவைசிகிச்சையின்போது வலியில்லாமல் இருக்க பலவகையான மருந்துகள் உபயோகிக்கப்பட்டன. உதாரணத்துக்கு சீனர்கள், அக்குபஞ்சர் எனப்படும், உடம்பில் சிறிய ஊசிகளைக் குத்தும் முறையைக் கண்டுபிடித்தார்கள்.
பண்டைக்கால ரோமானியர்களும் எகிப்தியர்களும் மந்திரேக் எனும் மந்தரகோரா செடியின் வேரைப் பயன்படுத்தினர். ரொம்ப காலம் இதுவே ஐரோப்பிய மருத்துவர்களால் நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படுத்த உபயோகிக்கப்பட்டது.
அடுத்து, கோக்கோ காயின் மேற்பகுதியை கடித்துச் சாப்பிடச் சொன்னார்கள். வலி தெரியாமல் இருக்க கோக்கோ திரவத்தை காயங்களின் மீது தடவுவதும் நடந்தது.
ஆங்கிலேய விஞ்ஞானியான ஹம்பிரி டேவி, மயக்கமூட்டும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1801-ல் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் கலவையான நைட்ரஸ் ஆக்சைடை கண்டுபிடித்தார். அதுதான் ‘சிரிப்பூட்டும் வாயு’ எனப்படுகிறது. இந்த வாயுவைக் கண்டுபிடிப்பதற்குள் ஹம்பிரி டேவி அதன் பாதிப்பால் பல தடவை மயக்கம் போட்டு விழுந்தார். அவரது வழிகாட்டலில்தான் வாயுக்கள் மயக்க மருந்தானது.
ராணி விக்டோரியா தனது ஏழாவது குழந்தை வலி இல்லாம பிறக்க உதவி செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர் சிம்சனிடம் கேட்டார். அவர்தான், 1838-ல் முதல்முறையாக குளோரோபார்மை பயன்படுத்தினார்.
ஜார்ஜியா நாட்டு மருத்துவரான கிராபோர்டு 1842-ம் ஆண்டு மயக்கமருந்தாக ஈதரை உபயோகப்படுத்தினர். ஆனால் அது சரியாக பலன் தரவில்லை. ஈதர் பிரயோகிக்கப்பட்ட நோயாளிகள் அறுவைசிகிச்சையின் பாதியில் மயக்கம் தெளிந்து எழுந்து கத்தியதெல்லாம் நடந்தது. இப்போது குளோரோபார்ம் மற்றும் பார்பியூரிக் அமிலம் ஆகியவை மயக்க மருந்தாக பயன்படுகிறது.
இன்று தேர்ந்த மயக்கவியல் நிபுணர்களின் உதவியுடன், அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கான மயக்கமருந்து செலுத்தப்படுகிறது.

Related Tags :
Next Story