வடகொரிய ராணுவப் பெண்களின் புலம்பல்கள்
தனது படை பலத்தால் வல்லரசான அமெரிக்காவையே எதிர்க்கும் வடகொரிய ராணுவத்தில் உள்ள பெண்களின் பரிதாபக் குரல்கள் எழும்பியிருக்கின்றன.
உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாகப் பணிபுரிவது சாதாரண விஷயமல்ல என்று அந்த வீராங்கனைகள் கூறுகின்றனர். அந்த ராணுவத்தில் இருந்து கொண்டே குரல் எழுப்புவது சாத்தியமில்லை. வடகொரிய ராணுவத்தில் இருந்து தப்பித்து அண்டை நாடுகளில் புகலிடம் பெற்ற பெண்கள்தான் இவ்வாறு குரல் கொடுக்கின்றனர்.
அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான், லீ சோ இயோன். இவர் சுமார் 10 ஆண்டு காலம், 20-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தனது ராணுவப் பிரிவில் உள்ள படுக்கை அறையில் தங்கியிருந்தார்.
அங்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் சீருடைகளை வைத்துக்கொள்ள ஒரு பெட்டி அளிக்கப்பட்டிருக்குமாம். அதற்கு மேல் இரண்டு புகைப்படங்கள் இருக்கும்.
வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங் புகைப்படமும், தற்போதைய தலைவரின் தந்தையான கிம் ஜோங் இல்லின் புகைப்படமும்தான் அவை.
வடகொரிய ராணுவத்தை விட்டு வெளியேறி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், அங்கிருந்த நாட்களின் நினைவுகளையும், படைத் தளத்தின் வாசத்தையும் இன்னும் தன்னால் நினைவுகூர முடிகிறது என்கிறார், இயோன்.
“நாங்கள் படுக்கும் படுக்கை, நெல் உமியைக் கொண்டு செய்யப்பட்டது. அவை பருத்தியால் தயாரிக்கப்பட்டவை அல்ல. அதனால் எங்கள் உடலிலிருந்து வரும் வேர்வையும் நாற்றமும் அதில் இருக்கும். அப்படுக்கை, இதமாய் இருக்காது” என்று விளக்குகிறார்.
ராணுவப் பெண்களுக்கு துணிகளைத் துவைக்க போதுமான வசதிகளும் இல்லையாம். அதனால் தங்களின் படுக்கையை முறையாக துவைக்க முடியாததும் இந்நிலைக்குக் காரணம் என்கின்றனர்.
“குளிப்பதற்கு போதுமான வசதிகளும் எங்களுக்கு இல்லை. பெண்களாகிய எங்களுக்கு இந்த விஷயம் மிகவும் கடின மானதாக இருந்தது” என்று இயோன் சொல்கிறார்.
“எங்களுக்கு வெந்நீர் வழங்கப்படாது. மலைகளில் இருந்து வரும் நீரை ஒரு குழாய்போட்டு இணைத்திருப்பார்கள். குழாய் மூலம் அந்த தண்ணீர்தான் எங்கள் இருப்பிடத்துக்கு வரும். தண்ணீர் மட்டுமின்றி, அதனுடன் பாம்பு, தவளை போன்றவையும் வரும்.”
பல்கலைக்கழகப் பேராசிரியரின் மகளான இயோனுக்குத் தற்போது 41 வயதாகிறது. இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பலரும் வடகொரிய ராணுவத்தில் இருந்திருக்கிறார்கள்.
1990-களில் வடகொரியாவை கடும் பஞ்சம் தாக்கியபோது, தினசரி உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இயோன் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேர்ந்தாராம். ஆயிரக்கணக்கான பெண்கள், இந்தக் காரணத்துக்காகவே ராணுவத்தில் இணைந்திருக்கின்றனர்.
“வடகொரியாவில் கடும் வறட்சி ஏற்பட்ட காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலை தேடத் தொடங்கினர். அப்படி ராணுவத்தில் இணைந்த பெண்கள் மோசமாக நடத்தப்பட்டனர். துன்புறுத்தல்கள், பாலியல் சீண்டல்கள் போன்றவற்றுக்கு அவர்கள் ஆளாகினர்” என ‘வடகொரியாவின் மறைவான புரட்சி’ என்ற நூலின் ஆசிரியரான ஜீன் பேக் கூறு கிறார்.
“நான் ராணுவத்தில் பணியாற்றியவரை, மாதவிலக்கு நாட்களை எதிர்கொள்வதற்கான எந்த வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் அவலநிலைக்கு நாங்கள் ஆளானோம்” என்று இயோன் சொல்கிறார்.
இருபது வயதான இன்னொரு பெண், தான் அதிக நேரம் ராணுவ பயிற்சி மேற்கொண்டதாகவும், அதன்காரணமாக இரண்டு ஆண்டுகள் தனக்கு மாதவிலக்கு தள்ளிப்போனதாகவும் கூறுகிறார்.
வறட்சிக் காலத்தில் பல பெண்கள் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் ராணுவத்தில் இணைந்தனர். ஆனால், 18 வயதில் இருந்தே பெண்கள் அனைவரும் கட்டாயம் 7 ஆண்டு ராணுவ சேவையில் ஈடுபட வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு வடகொரிய அரசு அறிவித்தது.
அத்துடன், ராணுவத்தில் உள்ள பெண்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப்படும் என்று அரசு கூறினாலும், இன்னும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ராணுவ வீராங்கனைகளுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை என்று கூறப்படுகிறது.
பாலியல் கொடுமையும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருப்பதாக வீராங்கனைகள் புகார் கூறுகின்றனர்.
இந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முக்கியமானதாக எடுத்துக்கொள்வதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் வடகொரிய அரசு கூறியது.
ஆனால், “பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் வாக்குமூலம் அளிப்பது இல்லை. இதனால், குற்றம் செய்தவர்கள் எந்தத் தண்டனையும் பெறாமல் தப்பிக்கிறார்கள்” என, ‘நூறு கேள்விகளில் வடகொரியா’ என்ற நூலின் ஆசிரியரான ஜூலியர் மேரிலாட் கூறுகிறார்.
அவரே தொடர்ந்து, “வடகொரியா ஓர் ஆணாதிக்க சமூகம். அந்த ஆதிக்கம் ராணுவத்திலும் வேர்விட்டு இருக்கிறது. ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்து, கட்டுமானத் துறை, சிறிய படைத் தளங்கள் ஆகியவற்றில் பணிசெய்பவர்களின் நிலை இன்னும் மோசம். அவர்கள் மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள்” என்கிறார்.
வடகொரிய ராணுவத்தில் சார்ஜெண்டாக பணி புரிந்த லீ சோ இயோன், தனது 28-வது வயதில் ராணுவத்தில் இருந்து விலகினார். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதற்கென்று அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், ராணுவத்துக்கு வெளியே வாழ்க்கையை வாழ வசதி ஏற்படுத்தப்படாத அவர், பொருளாதார ரீதியாக சிரமப்பட்டார். இந்நிலையில் 2008-ம் ஆண்டு அவர் தென்கொரியாவுக்குத் தப்ப முடிவுசெய்தார்.
முதல் முயற்சியில் சீன எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார்.
சிறையிலிருந்து விடுதலையான சில நாட்களில் தன் இரண்டாவது முயற்சியை மேற்கொண்டார். டுமென் ஆற்றை நீந்திக் கடந்தவர், அங்கிருந்து தரகர்கள் மூலம் சீனா வழியாக தென்கொரியாவைச் சென்றடைந்தார்.
நூலாசிரியர்களான ஜூலியட் மெரிலோட்டும், ஜீன் பேக்கும், லீ சோ இயோன் சொன்ன வாக்குமூலங்கள், தப்பி வந்த மற்றவர்கள் சொன்னவற்றோடு ஒத்துப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வடகொரியாவில் இருந்து தப்பிவந்த பலர், தங்களுக்குத் தரப்படும் சன்மானத்துக்காக மிகைப் படுத்தப்பட்ட கதைகளை கூறுகின்றனர் என்றும், தப்பி வந்தவர்களின் கதைகளைப் பதிவு செய்யும்போது எச்சரிக்கை தேவை என்றும் கூறுகின்றனர். அதேநேரம், வடகொரிய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் ‘நல்ல விஷயங்களை’ மட்டும் பிரசாரமாக வெளிப்படுத்துகின்றன.

Related Tags :
Next Story