சரியாக படிக்கவில்லை என்று தாயார் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


சரியாக படிக்கவில்லை என்று தாயார் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Dec 2017 2:00 AM IST (Updated: 10 Dec 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

சரியாக படிக்கவில்லை என்று தாயார் திட்டியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எட்டயபுரம்,

சரியாக படிக்கவில்லை என்று தாயார் திட்டியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்தாம் வகுப்பு மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள ஜமீன் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜக்கம்மாள். இவர்களுடைய மகன் முத்து முருகபெருமாள்(வயது 15).

இவர் பக்கத்து ஊரான இளம்புவனத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரியாக படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்தார்.

தாயார் கண்டிப்பு; தூக்கில் தொங்கினார்

இதனை அவரது தாயார் ஜக்கம்மாள் கண்டித்தார். இதனால் மனமுடைந்த முத்து முருகபெருமாள் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் ஜக்கம்மாள் தன்னுடைய மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முத்து முருகபெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story