நெல்லையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா


நெல்லையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 10 Dec 2017 2:30 AM IST (Updated: 10 Dec 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நெல்லை,

நெல்லையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பிறந்த நாள் விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு, ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரம் மற்றும் பெண்களுக்கு சேலைகளை வழங்கினார். மேலும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில பொதுச் செயலாளர் வானமாமலை, மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உமாபதி சிவன், சுந்தர்ராஜ பெருமாள், ராம்நாத், பொருளாளர் ராஜேஷ்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடியேற்று விழா

இதைதொடர்ந்து வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் தணசிங் தலைமையில் தனுஷ்கோடி ஆதித்தன் கட்சி கொடியேற்றி வைத்தார். அப்போது பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதுதவிர நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பு சாலைக்குமாரசாமி கோவில், உடையார்பட்டி திருஇருதய ஆலயம், மேலப்பாளையம் பள்ளிவாசலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


Next Story