ஆசிரியைகள் கண்டித்ததால் மாணவி தற்கொலையா? கல்வி அதிகாரிகள் விசாரணை
மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு ஆசிரியைகளின் கண்டிப்பு காரணமா? என்பது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலத்தில் நேற்று 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் ஜெயராணி, கவிஸ்ரீ ஆகியோர் தங்களை ஆசிரியைகள் திட்டியதால் மனமுடைந்து முதல்அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்தனர். இதில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். கவிஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல், அனைவருக்கும் கல்வி இயக்கம் உதவி திட்ட அலுவலர் பழனிசாமி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சிகிச்சை பெற்று வரும் மாணவி கவிஸ்ரீயை பார்த்தனர். ஆனால் மாணவியால் சரியாக பேசமுடியவில்லை. ஆசிரியைகள் கண்டிப்பு காரணமாக மாணவிகள் இதுபோன்ற முடிவை எடுத்தார்களா? என்பது குறித்து மாணவிகளின் பெற்றோர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி நிருபர்களிடம் கூறுகையில், மாணவிகள் இருவரும் நெருங்கிய நட்பில் இருந்துள்ளனர். வகுப்பறையில் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்ததால் இருவரும் தனித்தனி பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகள் இதுபோன்ற துயரமான முடிவை எடுப்பார்கள் என்று நினைத்து பார்க்கமுடியவில்லை. மாணவிகளின் இந்த விபரீத முடிவுக்கு ஆசிரியைகள் கண்டிப்பு காரணமா? என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் இதர ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.
அதேசமயம், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கவிஸ்ரீயிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கலைவாணி நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர், அவர் மாணவியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். மாணவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

Related Tags :
Next Story