ஆசிரியை திட்டியதால் 4-வது மாடியில் இருந்து தோழியுடன் குதித்த பள்ளி மாணவி பரிதாப சாவு
சேலத்தில் ஆசிரியை திட்டியதால் 4-வது மாடியில் இருந்து தோழியுடன் குதித்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தோழியான இன்னொரு மாணவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்,
சேலம் அரிசிபாளையத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகள் ஜெயராணி (வயது 13), சேலம் சங்கர்நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் கவிஸ்ரீ (13) ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். மாணவிகள் இருவரும் நெருங்கிய தோழிகள். இவர்களில் கவிஸ்ரீ தினமும் ஆட்டோவிலும், ஜெயராணி சைக்கிளிலும் பள்ளிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் காலையில் மாணவிகள் இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால் மாலையில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிகள் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் 2 பேரின் புத்தக பைகள் பள்ளி வகுப்பறையில் இருந்தது தெரியவந்தது. மாணவிகள் 2 பேர் மாயமானது தொடர்பாக அவர்களது பெற்றோர் தரப்பில் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மாணவிகளை தேடிவந்தனர்.
இந்தநிலையில், சேலம் முதல்அக்ரஹாரம் தேர்வீதியில் உள்ள அப்சரா விடுதி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து மாணவிகள் 2 பேர் நேற்று காலை திடீரென கீழே குதித்தனர். இதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அருகில் இருந்த கடைக்காரர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள், உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாடியில் இருந்து குதித்த மாணவிகள் 2 பேரும், அரிசிபாளையம் தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் மாயமானவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். கவிஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதையடுத்து போலீசார் ஜெயராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் மாணவி கவிஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளி ஆசிரியை ஒருவர் 2 மாணவிகளை திட்டியதாகவும், இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர்கள் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானதால் பள்ளி முன்பு சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலும், அரசு ஆஸ்பத்திரியில் செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கவிஸ்ரீயை பார்ப்பதற்காக அவரது தாய் விஜி, தந்தை சக்திவேல் மற்றும் உறவினர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் மாணவியை பார்த்து கதறி அழுதனர்.
இறந்துபோன மாணவி ஜெயராணிக்கு தாயார் கிடையாது. அவரது தாய் ஜெயமேரி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மாணவியை அவரது சித்தி செல்வராணி வளர்த்து வந்தார். ஜெயராணி இறந்த தகவலை அறிந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்த பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
மாணவிகள் ஜெயராணியும், கவிஸ்ரீயும் பள்ளியில் ஆசிரியைகள் தங்களை அவமானப்படுத்துவதாகவும், இதனால் தங்களை நிரந்தரமாக பிரித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி கவிஸ்ரீ தனது பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். மேலும், வகுப்பறையில் தனித்தனி பெஞ்சில் இருவரையும் ஆசிரியை ஒருவர் இருக்க வைத்துள்ளார். இதனால் இருவரும் மனஉளைச்சலில் இருந்து வந்தனர்.
மாணவி ஒருவர் தனது நோட்டில், “உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியாது? நீ இல்லாமல் நானில்லை. நீ இறந்துவிட்டால் நானும் கையை பிளேடால் கிழித்து இறந்துவிடுவேன்“ என்று எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. இதை படித்து பார்த்த ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வருமாறும் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாணவிகள் குதித்த அந்த 4 மாடி கட்டிடம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு சக்தி (35) என்பவர் காவலாளியாக உள்ளார். வழக்கமாக 4-வது மாடிக்கு செல்லும் வழி பூட்டு போடப்பட்டு இருக்கும். நேற்று காலை மாணவிகள் அதை எப்படி திறந்து மேலே சென்றார்கள் என்பதும், இரவு முழுவதும் அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்பதும் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது. இந்த இடம் மாணவிகளுக்கு ஏற்கனவே தெரியுமா? என்பது குறித்து காவலாளி சக்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இணைபிரியாத நட்பால் மாணவிகள் எடுத்த விபரீத முடிவினால் ஒரு மாணவி பலியான சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story