செங்குன்றம் அருகே சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
செங்குன்றம் அருகே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட ஆருண் உல்லாச நகர் ஆசிரியர் காலனி கணபதி கார்டன் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்ல செங்குன்றம் வடகரை சாலையில் இருந்து உள்வட்ட சாலை உள்ளது.
ஆனால், இந்த சாலை சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் மோட்டார்சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
சாலை மறியல்
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை வடகரை மாதவரம் நெடுஞ்
சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர், சப்–இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், வட்டார வளர்ச்சி அதிகாரி வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story