ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

சிப்காட் (ராணிப்பேட்டை),

இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கோபிநாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தலையை வெட்டி வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வக்கீல் கோபிநாத்தை கைது செய்யக்கோரி ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குண்டா என்கிற சார்லஸ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் தமிழ், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் ரமேஷ்கர்ணா, ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜா, தொகுதி துணை செயலாளர் ஆயிலம் பிரபு, வக்கீல் ராமச்சந்திரன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்று ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். 

Next Story