கடலூர் கெடிலம் ஆற்றுப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகள் அகற்றம்
கடலூர் கெடிலம் ஆற்றுப்பாதையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
கடலூர்,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை வருவாய்துறை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.
மாவட்டத்தின் தலைந கரான கடலூரில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சின்னவாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகள், வீடுகள் போன்றவற்றை பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கடலூரில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின்போது சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் சின்ன வாய்க்கால் வழியாக வழிந்தோடி கெடிலம் ஆற்றில் கலந்தது.
இந்த நிலையில் தற்போது கெடிலம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று கடலூர் இம்பீரியல் சாலையில் தனியார் ஓட்டல் அருகே 60 அடி அகலம் சுமார் 200 அடி நீளம் கொண்ட கெடிலம் ஆற்றுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், டீ கடை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய அலுவலகம் ஆகியவை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதை கடலூர் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் நேரில் பார்வையிட்டார். அப்போது கடலூர் தாசில்தார் பாலமுருகன், பொதுப்பணித்துறை(நீர்வளம்) உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story