வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முற்றுகை


வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முற்றுகை

வாணியம்பாடி,

‘ஒகி’ புயலால் கடலில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கக்கோரி வாணியம்பாடியில் காங்கிரஸ் சார்பில் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய்இளஞ்செழியன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு ஆகியோர் தலைமை தாங்கினர்.

நகர தலைவர்கள் ரியாஸ், சுரேஷ், ஒன்றிய தலைவர்கள் சங்கர், பழனி, நந்தி, கொத்தூர் மகேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், ஆர்ப்பாட்டம் செய்து ரெயில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


Next Story