சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முற்றுகை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் கைது
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை வடசென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கருத்து தெரிவித்தார். அவரை கண்டித்து நேற்று பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபிநாத்தை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை வடசென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 30 பேர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, உடனடியாக விடுவித்தனர்.
Related Tags :
Next Story