புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தக்கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மக்கள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலையன், தேனீர் சங்க மாநகர செயலாளர் ரமேஷ், அனுஅன்புத்தம்பி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகு.தியாகராஜன், ஜீவாமணிமாறன், சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தை ராமநாதன் ஆஸ்பத்திரி ரவுண்டானா வரை விரிவு படுத்தி அமைக்க வேண்டும். கந்துவட்டி கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவில் மண்டபம், பூச்சந்தை கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும். பூக்காரத்தெரு பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை புறக்கணிக்காமல் அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தை இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில இணை அமைப்பாளர் தாஜூதீன் தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் அன்பழகன், மாநில இணை செயலாளர் அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் தினகரன், தஞ்சை மாவட்ட க்குழு உறுப்பினர் கார்த்திகேயன், புதுச்சேரி மாநில செயலாளர் அலெக்ஸ்பிரிட்டோ, மாநில தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் ஆனந்த் முடித்து வைத்தார்.

Related Tags :
Next Story