கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நரகுந்து தாலுகாவில் முழு அடைப்பு
கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நரகுந்து தாலுகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
பெங்களூரு,
கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நரகுந்து தாலுகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததுடன், பஸ்கள் மற்றும் ஆட்டோக்களும் ஓடவில்லை.
நரகுந்துவில் முழு அடைப்பு
தார்வார், கதக் உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி அந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு கோவா, மராட்டிய மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கதக் மாவட்டம் நரகுந்து தாலுகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, நரகுந்து தாலுகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கடைகள் அடைப்பு
முழு அடைப்பையொட்டி நரகுந்து தாலுகாவில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தார்கள். இதனால் ஓட்டல்கள், பேக்கரி கடைகள், மளிகைக்கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. காலை 9 மணிவரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. ஆனால் அதன் பிறகு நரகுந்து தாலுகாவில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோக்கள், வாடகை கார்களும் இயங்கவில்லை. இதன் காரணமாக முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
நரகுந்து டவுனில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story