சொட்டுநீர் பாசனத்தில் போலீசார் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள்
ராமநாதபுரத்தில் சொட்டுநீர் பாசனத்தில் போலீசார் உரமில்லாமல் இயற்கை முறையில் விளைவித்த கத்தரிகாய்களை அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் போலீசாரின் முயற்சியால் குளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த குளத்தில் கிடைக்கும் சுவையான நல்ல தண்ணீரை காவலர் குடியிருப்புகளுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, இந்த தண்ணீரை மேலும் பயனுள்ளதாக செலவிடும் வகையில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இன்பமணி மேற்பார்வையில் ஆயுதப்படை மைதான வளாகத்தில் சுமார் 1½ ஏக்கர் நிலத்தினை சுத்தம் செய்து வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகாய், கொடி அவரை போன்றவற்றை பயிரிட்டுஉள்ளனர். குறைந்த தண்ணீரில் நன்கு விளைச்சல் தரும் வகையிலும், அதிக சூரிய ஒளியினால் செடிகள் பாதிக்காத வகையிலும் தழைச்சத்து காக்கும் பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தில் காய்கறிகளை வளர்த்து வருகின்றனர்.
இதன்மூலம் அதிக சூரிய ஒளியால் செடிகளின் வேர் பகுதி பாதிக்கப்படாமல் இருப்பதோடு, வேர்களுக்கு தேவையான மிதமான வெப்பம் மட்டும் கிடைத்து தழைச்சத்து பாதிக்காமல் காப்பாற்றப்படுவதால் காய்கறி செடிகள் நன்கு வளர்ந்துள்ளதோடு, தினமும் கொத்து கொத்தாக காய்கறிகள் காய்த்து வருகின்றன. இந்த காய்கறி செடிகளுக்கு மேற்கண்ட குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டும் சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், எந்தவொரு ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுவதால் பூச்சி தொல்லைகள் இல்லாமல் காய்கறிகள் முழுமையான சத்துக்களோடு விளைந்து வருகிறது. இங்கு விளையும் காய்கறிகளை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மலிவு விலை கடையில் விற்பனை செய்து வருவதோடு, போலீசார் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் என்பதால் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். எந்தவித பூச்சி தாக்குதலும், ரசாயன உர கலப்பும் இல்லாத இயற்கையான காய்கறி என்பதாலும், வெளிமார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு கிடைப்பதாலும் இந்த காய்கறிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 கிலோ கத்தரி காய்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த காய்கறிகள் சிலநிமிடங்களில் விற்று தீர்ந்து விடுகிறது. இந்த காய்கறிகளை விற்பனை செய்து கிடைக்கும் வருவாய் போலீசாரின் நலன்காக்க செலவிடப்படுகிறது.

Related Tags :
Next Story