பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; வியாபாரிகளுக்கு அபராதம்


பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை;  வியாபாரிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Dec 2017 3:13 AM IST (Updated: 10 Dec 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக கடைகளில் ஆய்வு நடத்தி அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்பிடம் பதிவு செய்யாமல் பிளாஸ்டிக் பை விற்பனை செய்வோர், அதனை பயன்படுத்தும் கடைக்காரர்கள், வியாபாரிகள் மீது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்ட விதியின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் முத்து தலைமையில், நகர் நல அலுவலர் இந்திரா, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி ஆகியோர் பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை, புதுக்கடை பஜார் பகுதிகளில் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஆணையாளர் முத்து கூறியதாவது:-
கடைகளில நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பை விற்பனை செய்தவர்கள் 3 பேரிடம் இருந்தும், அதனை பயன்படுத்தும் கடைக்காரர்கள், வியாபாரிகள் 10 பேரிடம் இருந்தும் பிளாஸ்டிக் கப்புகள், பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளோம். விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வினியோகம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story