போலீஸ்நிலையத்திற்கு வரும் 50 சதவீத புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை ஆய்வில் தகவல்
போலீஸ் நிலையத்திற்கு வரும் 50 சதவீத புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பை,
போலீஸ் நிலையத்திற்கு வரும் 50 சதவீத புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாசிக் சம்பவம்நாசிக்கில் உள்ள போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்தார். ஆனால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மறுத்துவிட்டனர். மானபங்க வழக்குப்பதிவு செய்து இருந்தனர். ஆனால் 3 மாதத்திற்கு பிறகு மருத்துவ சோதனைக்கு பிறகு அந்த பெண் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் பொது மக்களின் புகார்களை முறையாக வழக்குப்பதிவு செய்வதில்லை என காவல்துறை மேல் இடத்திற்கு புகார்கள் கூவிந்தன.
50 சதவீதம் புறக்கணிப்புஇதையடுத்து போலீஸ் உயர்அதிகாரிகள் பொது மக்கள் உதவியுடன் குழு ஒன்றை தொடங்கினர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ்நிலையங்களுக்கு சென்று திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு என பல்வேறு புகார்களை அளித்தனர். இதில் எத்தனை புகார்களை அவர்கள் வழக்குப்பதிவு செய்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் போலீசார் தங்களுக்கு வந்த புகார்களில் 50 சதவீதம் வரை வழக்குப்பதிவு செய்யாமல் புறக்கணித்து இருப்பது தெரியவந்தது.
கடும்நடவடிக்கை எடுக்கப்படும்இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. பிபின் பிகாரி கூறும்போது, ‘‘ பொது மக்கள் அளிக்கும் புகார்கள்குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் தவறான செயல் ஆகும். இது நீதியை சிதைக்கும் செயல் ஆகும். வழக்குப்பதிவு செய்யாமல் புறக்கணிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.