தியாகத்தின் வேர்களைத் தேடி..
லண்டன், இந்தியாவை 200 ஆண்டு களாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களின் அதிகார மையம். உலகின் முக்கிய நகரம். இங்கிலாந்தின் தலைநகரம்.
லண்டன், இந்தியாவை 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களின் அதிகார மையம். உலகின் முக்கிய நகரம். இங்கிலாந்தின் தலைநகரம்.
இங்கிலாந்து கொடுத்த தவப்புதல்வன் கர்னல் ஜான் பென்னிகுவிக். தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களால் கடவுளுக்கு நிகராய் வணங்கக்கூடிய மாமனிதர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, ‘நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்’ என்ற வாசகத்துடன் கூடிய ஜான் பென்னி குவிக் உருவப்படத்தை தங்களின் வீடுகளில் வைத்து வணங்குவதை தேனி மாவட்டத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.
காலத்துக்கும் கம்பீரமாய் நின்று, 5 மாவட்டங் களின் கண்ணீர் துடைக்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் தான் இந்த பென்னிகுவிக். தென்மாவட்டங்களில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக கட்டப்பட்டதே முல்லைப்பெரியாறு அணை. 152 அடி உயரம் என்ற கம்பீரத்துடன் கட்டப்பட்ட இந்த அணையை கட்டுவதற்கு பென்னிகுவிக் இயற்கையை எதிர்த்து போராட வேண்டியதிருந்தது.
ஆங்கிலேய அரசு ஒதுக்கிய நிதியில் அணையை கட்டிக் கொண்டு இருந்த போதே பெய்த பேய்மழையால் கட்டுமான பொருட்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பெரும் இழப்பு ஏற்பட்டது. மீண்டும் அணை கட்ட ஆங்கிலேய அரசு முன்வரவில்லை. அரசிடம் கேட்டு பயனில்லை என்று, பென்னிகுவிக் இங்கிலாந்துக்கு சென்று தனது வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தில் அணையை கட்டினார். செய்நன்றி மறவாத தமிழக மக்கள் எல்லைகளைக் கடந்து பென்னி குவிக்கை வணங்கி வருகின்றனர்.
இந்த வெள்ளைக்கார தியாகியின் வேர்கள், விழுதுகளைத் தேடி லண்டனில் உலா வருகிறார், தமிழக இளைஞர் ஒருவர். அவர் பெயர் சந்தனபீர்ஒலி (வயது 29). தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர். லண்டனில் எம்.பி.ஏ. படிப்பதற்காக சென்றார். பென்னி குவிக் மீது கொண்ட பற்றும், முல்லைப்பெரியாறு அணையின் மீது கொண்ட காதலும் அவரை பென்னி குவிக் குறித்த ஆவணப்படத்தை இயக்குவதற்கு உந்தித் தள்ளியது.
இதற்காக அவர் பயணித்த தூரம் அதிகம். சந்தித்த நபர்கள் ஏராளம். கனவு கைகூடும் நிலையில் லண்டனில் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாக உள்ள சந்தனபீர்ஒலியை தொடர்பு கொண்டபோது, அவர் தனது அனுபவங்களை மனம் திறந்து நம்மிடம் பேசினார்!
உங்கள் ஆவணப்படம் எதைச் சொல்லப் போகிறது?
கர்னல் ஜான் பென்னிகுவிக் வாழ்க்கை வரலாறு மற்றும் அணையை பற்றி விளக்கிவிட்டு, தமிழகத்தில் உள்ள ஆறுகளின் தற்போதைய நிலைமை, அதை எப்படி சீர் செய்வது? அரசாங்கம் மட்டும் தான் இதற்கு காரணமா? மக்கள் எப்படி கழிவுகளை ஆறுகளில் கொட்டுகிறார்கள்? என்பதை கூறும் வகையில் ஆவணப்படம் இருக்கும். சுதந்திரத்துக்கு முன்பு ஆறுகள் எப்படி இருந்தன? ஆங்கிலேயர் காலத்தில் விவசாயத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? ஆறுகளை எப்படி பாதுகாத்தார்கள்? சுதந்திரத்துக்கு பிறகு விவசாயம் எப்படி வீழ்ந்தது? என்பதை எல்லாம் ஆவணப் படத்தில் விளக்கி உள்ளேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ளது.
இப்படி ஒரு ஆவணப் படத்தை தயாரிக்கும் எண்ணம் எப்படி வந்தது?
சொல்லப்போனால் இது பேராசை தான். முல்லைப்பெரியாறு அணையின் நீரை நாங்கள் குடிக்கிறோம். சின்ன வயதில் இருந்தே பென்னிகுவிக் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். 2011-ம் ஆண்டு அணைக்காக நடந்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் எனக்கு அணை குறித்தும், பென்னிகுவிக் குறித்தும் அதிகம் அறியத் தூண்டியது. அந்த தூண்டுதலே ஆவணப்படத்தை எடுக்க வைத்துள்ளது. போராடி, உயிர் தியாகம் செய்து, நீதிமன்றங்களில் வாதாடி பெற்ற தண்ணீரை நாம் நல்ல முறையில் பயன்படுத்துகிறோமா? என்பதை சொல்வதற்காக இந்த முயற்சி.
எந்த மாதிரியான தகவல்களை திரட்டியுள்ளீர்கள்?
ஜான் பென்னிகுவிக் குடும்பம் குறித்த முழு விவரங்களையும் சேகரித்து விட்டேன். அவர் எப்படி இறந்தார்? அவருடைய குடும்பத்தினர் இப்போது எங்கெல்லாம் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்துள்ளேன். அவருடைய குடும்பத்தினரிடம் தனித்தனியாக தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்துள்ளேன். அவர் வாழ்ந்த இடம், கல்லறை ஆகிய இடங்களை நேரில் கண்டறிந்து, தகவல்களை திரட்டி உள்ளேன். அணை கட்டும்போது எவ்வளவு கஷ்டப்பட்டார்? எங்கிருந்து தளவாட பொருட்களை கொண்டு வந்தார்? இடையில் எவ்வளவு பேர் இறந்தார்கள்? என்பது குறித்த தகவல்களை திரட்டி உள்ளேன்.
நீங்கள் எத்தனை ஆண்டு காலமாக லண்டனில் இருக்கிறீர்கள்?
6 ஆண்டுகள் ஆகிறது. இங்கு தான் எம்.பி.ஏ. முடித்தேன். முடித்து விட்டு 2 ஆண்டுகள் இங்கே இருக்கிறேன். சில காலம், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்தேன். இப்போது ஆவணப்படத்துக்காக மட்டுமே லண்டனில் உள்ளேன். 6 ஆண்டு களாகவே இந்த ஆய்வில் ஈடுபட்டு கல்லறையை கண்டுபிடித்தேன். சிதறிக் கிடந்த அவருடைய குடும்ப உறுப்பினர்களை கண்டறிந்து ஒருங்கிணைத்து உள்ளேன். அவர்கள் எல்லாம் வருகிற ஜனவரி மாதம் பென்னிகுவிக் பிறந்த நாளுக்கு இந்தியா வர முடிவு செய்துள்ளனர்.
உங்கள் தேடல் அனுபவம் குறித்து...?
லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்துக்கு முதன் முதலில் சென்றேன். லண்டனில் உள்ள மிகப்பெரிய நூலகம் அது. அங்கு ஜான் பென்னிகுவிக் குறித்த தகவல்களை தேட தொடங்கினேன். ‘தி பெரியாறு ப்ராஜெக்ட்’ என்ற புத்தகம் உள்ளது. அந்த புத்தகத்தை வாசித்தேன். நிறைய அதிகாரிகளை சந்தித்தேன். உள்ளூர் நூலகங்களுக்கு சென்றும் அவர் குறித்த தகவல்களை சேகரித்தேன். 100 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்த இடம் வேறு, அவரை புதைத்த இடம் வேறு. இதனால், இரண்டையும் கண்டுபிடிக்க அதிக சிரமப்பட்டேன். அவருடைய இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். அவருடைய குடும்பத்தினரை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அயர்லாந்து, கெண்ட், வேல்ஸ், பிளாக்போல் போன்ற பகுதிகளில் அவருடைய வாரிசுகள் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.
கல்லறை எந்த இடத்தில், என்ன நிலையில் உள்ளது?
அவருடைய கல்லறை கேம்பர்லி அருகில் பிரிம்லீ என்ற இடத்தில் புனிதபீட்டர் கிறிஸ்தவ ஆலய கல்லறை தோட்டத்தில் உள்ளது. மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சுத்தப்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன். அனுமதி கிடைத்து இருக்கிறது.
லண்டன் மக்கள் பென்னிகுவிக் பற்றி எந்த அளவு தெரிந்து வைத்து இருக்கிறார்கள்?
இங்குள்ள மக்களிடம் அவரைப் பற்றி கூறினால், வியக்கிறார்கள். அவரைப் பற்றி அங்குள்ள நாளி தழில் செய்தி வெளிவந்த பிறகு எனக்கு மின்னஞ்சல் குவிந்தது. இப்படி ஒரு மனிதரா எங்கள் ஊரில் வாழ்ந்தார்? எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது? என்றார்கள். அவருடைய கல்லறை அமைந்துள்ள பகுதிக்கான கவுன்சில் அதிகாரிகளிடம் பேசி, கல்லறையை சீரமைக்கக் கோரிக்கை வைத்தேன். அதற்கு, ‘அவர் உங்கள் நாட்டுக்கு தான் நல்லது செய்தார். எங்கள் நாட்டுக்கு செய்யவில்லை. நீங்கள் செலவு செய்து அவரை பிரபலப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கான அனுமதியை மட்டும் அரசு தரும்’ என்று சொல்லிவிட்டனர்.
ஆவணப்படத்தை எப்போது வெளியிடப் போகிறீர்கள்?
வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதி பென்னிகுவிக் பிறந்தநாளன்று வெளியிடப் போகிறேன். இதில் பென்னிகுவிக் பேரன், பேத்திகள் பங்கேற்க ஆர்வமாக உள்ளார்கள். அவர்களை இந்த விழாவுக்காக தேனிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
எனது மனைவி பெயர் பர்வின்பானு. முகமதுகான் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் உத்தமபாளையத்தில் வசிக்கிறார்கள்.
ஆவணப்படத்துக்கு பின் உங்களின் திட்டம்?
பென்னிகுவிக் கல்லறை அமைந்துள்ள இடத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும். அங்கே அவருடைய வரலாறு குறித்தும், தியாகம் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் இடம்பெற வைக்க வேண்டும். இதற்கு அங்குள்ள அரசு அனுமதி கொடுக்க தயாராக உள்ளது. இதற்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை பணம் செலவு ஆகும். இதை தமிழக அரசே எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். இதற்காக தமிழக அரசுக்கும், தேனி மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைக்க உள்ளேன். அரசு முன்வராவிட்டால், தனது சொத்தை விற்று அணை கட்டிய இந்த உத்தமருக்காக நல்லோர்கள் உதவியுடன் அவருடைய கல்லறை அமைந்துள்ள இடத்தை நினைவிடமாக்கி பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்.
சந்தனபீர்ஒலியின் வார்த்தைகளில் நம்பிக்கை மிளிர்கிறது... நன்றியும்..!

Related Tags :
Next Story