குடும்பத்தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
பள்ளிக்கரணையில் குடும்பத்தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஒ. விசாரணை உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை வீராசாமி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளா மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், வலியால் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மஞ்சுளாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.