குழந்தை சாவில் திடீர் திருப்பம்: ‘கணவர் சாயலில் இல்லாததால் கொலை செய்தேன்’ பெண் வாக்குமூலம்
கணவர் சாயலில் இல்லாததால் குழந்தையை கொலை செய்தேன் என கைதான பெண் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கட்டப்பனை,
கட்டப்பனையை அடுத்துள்ள காஞ்சியார் முரிகாட்டுகுடி பகுதியை சேர்ந்தவர் பினு. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சந்தியா (வயது 28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியா, கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். பின்னர் பெரியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர். இதையடுத்து பினுவும் தனது மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த சந்தியாவுக்கு கடந்த 30-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வந்தார். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி குழந்தை எவ்வித சலனமும் இல்லாமல் இருப்பதாக சந்தியா தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக வீட்டுக்கு வந்த பினு, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை சோதனை செய்தபோது, குழந்தை இறந்திருந்தது தெரியவந்தது. மேலும் குழந்தை கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கட்டப்பனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தாயார் சந்தியா மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே எனது கணவருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் பிறந்த குழந்தை எனது கணவரின் சாயலில் இல்லை. எனவே மீண்டும் தனது கணவர் சந்தேகப்படுவாறோ? என அச்சம் ஏற்பட்டது. இதனால் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடினேன். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story