திருமண கோஷ்டியினர் வந்த சொகுசு பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; 32 பேர் படுகாயம்


திருமண கோஷ்டியினர் வந்த சொகுசு பஸ் பள்ளத்தில் பாய்ந்தது; 32 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:15 AM IST (Updated: 11 Dec 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டி அருகே, திருமண கோஷ்டியினர் வந்த சொகுசு பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பயணித்த 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

தானே,

பால்கர் மாவட்டம் வசாயில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துலேயில் இருந்து ஒரு தனியார் சொகுசு பஸ்சில் 60 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த பஸ், நேற்று மாலை 5 மணியளவில் பிவண்டி தாலுகாவில் உள்ள அம்பாடி கிராமம் அருகே சைத்தானி மேம்பாலத்தின் அருகே வேகமாக வந்தபோது, முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்று உள்ளது.

இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து. இதில், பஸ்சில் பயணித்த திருமண கோஷ்டியினர் 32 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தினால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உதவி கேட்டு அலறினார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பஸ் டிரைவர் வேகமாக ஓட்டுவதை கவனித்த பயணிகள் சிலர் அவரை மெதுவாக செல்லும் படி எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால் அதை கேட்காமல் அவர் பஸ்சை வேகமாக ஓட்டி வந்தே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story