திருமங்கலம், அலங்காநல்லூர் பகுதிகளில் மதுபாட்டில், கஞ்சா விற்றவர்கள் கைது


திருமங்கலம், அலங்காநல்லூர் பகுதிகளில் மதுபாட்டில், கஞ்சா விற்றவர்கள் கைது
x
தினத்தந்தி 11 Dec 2017 3:45 AM IST (Updated: 11 Dec 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம், அலங்காநல்லூர் பகுதிகளில் மதுபாட்டில், கஞ்சா விற்றவர்கள் கைது

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த குமாரம் பகுதியில் அலங்காநல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் சூரியபிரபாகரன் (வயது 23), விஜயபாரதி (19), கோபிநாத் (20) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

இதேபோல திருமங்கலம் நகர் போலீசார் ஆலம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில் விற்று கொண்டு இருந்த ராம்குமார் (வயது 28) என்பவரை கைது செய்து 127 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியில் மதுபாட்டில் விற்ற கண்ணன் (54) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story