யாரும் உதவ முன்வரவில்லை ஒருவரை மீட்டேன்; மற்றொருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பியும் யாரும் உதவ முன்வரவில்லை. ஒருவரை மீட்டேன் மற்றொருவர் என் கண்முன்னே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார் என்று வேதனையுடன் லாரி டிரைவர் கார்த்திகேயன் கூறினார்.
பொள்ளாச்சி,
கால்வாய்க்குள் கார் பாய்ந்து 3 பேர் பலியான விபத்தில் நேற்று காலை மீட்பு பணி நடந்தபோது அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விட்டனர்.
இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி- உடுமலை மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பாலத்தின் இருபுறமும் போலீசார் கயிறுகட்டி ஒரு புறம் இருந்து மறுபுறம் வாகனம் செல்ல முடியாதவாறு தடுத்தனர்.
இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்களை கோலார்பட்டி வழியாக உடுமலைக்கு செல்ல அறிவுறுத்தினர். காலை 7.30 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி காலை 10.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட பால்டேங்கர் லாரி டிரைவர் கார்த்திகேயன் கூறியதாவது:-
நான் காலை 7 மணி அளவில் கெடிமேடு கால்வாயில் குளித்துக்கொண்டு இருந்தேன். அப்போது திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. உடனே அதிர்ச்சி அடைந்து திரும்பி பார்த்தபோது ஒரு கார் வாய்காலுக்குள் பாய்ந்து தண்ணீரில் மூழ்கி கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் காரில் இருந்தவர்களை காப்பாற்ற சென்றேன். காரின் பக்க கதவு திறந்த நிலையில் இருந்தது. அந்த வழியாக உள்ளே இருந்து 2 பேர் வெளியே வந்தனர். அதில் ஒருவரை மட்டும் என்னால் மீட்டு கரை சேர்க்க முடிந்தது. மற்றொருவர் என் கண் முன்பே தண்ணீரில் அடித்து செல்லப் பட்டார்.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டும் அந்த வழியாக சென்ற யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. உதவிக்கு வந்து இருந்தால் அவரையும் மீட்டு இருக்க முடியும். தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர் கதி என்ன என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story