ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 29-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 29-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீரங்கம்,
காயத்ரியை விட சிறந்த மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு நிகரான விரதமும் கிடையாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதம் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இரவு கண் விழித்து திருமாலின் நாமத்தை உச்சரித்தால் சொர்க்கத்தை அடையலாம் என்பது ஐதீகமாகும். பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டாலும் இவற்றில் முதன்மையாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவே சிறப்பு வாய்ந்ததாகும். இதற்கு காரணம் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கன் தனது பக்தரான நம்மாழ்வாருக்கு மோட்சத்தை அளித்த வரலாறு இந்த திவ்ய தேசத்துக்கு தான் உண்டு.
இத்தகையை சிறப்பு மிக்க வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவின்போது, நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் அரையர்களால் அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும். இந்நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பாக உள்ள காயத்ரி மண்டபத்தில் வருகிற 18-ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள் ஆகும். அன்றைய தினம் காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதே போல் 28-ந்தேதி வரை எழுந்தருள்வார். 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்கிறார். அப்போது நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவிலில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story