தப்பிச்செல்ல முயன்ற காதல்ஜோடியை தடுத்த காவலாளிகளுக்கு கத்திக்குத்து போலீசார் விசாரணை
வெள்ளகோவில் அருகே தங்கி வேலை செய்த நூற்பாலையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற காதல்ஜோடியை தடுத்த காவலாளிகளுக்கு கத்திக்குத்து விழுந்தது.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சாலைப்புதூரில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரையாம்பட்டி என்ற ஊரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் பரமேஸ்வரன் (வயது 21) தங்கி கடந்த ஒரு ஆண்டாக வேலை பார்த்து வருகிறார்.
இதே நூற்பாலையில் தங்கி வேலை பார்த்து வந்த 19 வயது பெண்ணுடன் பரமேஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். மேலும் நூற்பாலையில் இருந்து வெளியேற காதல்ஜோடி அடிக்கடி முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில் நூற்பாலைக்கு பாரம் இறக்க நேற்று மதியம் 12 மணி அளவில் ஒரு லாரி வந்துள்ளது. இதனால் நூற்பாலை வாசலில் இருந்த காவலாளியான சேகர் (47) என்பவர் நூற்பாலையின் பெரிய இரும்பு கதவை திறக்க சென்றார். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய காதல் ஜோடி அந்த நூற்பாலையின் சிறிய வாசல் வழியாக வெளியே தப்பிச்செல்ல முயன்றதாக தெரிகிறது.
இதை பார்த்த மற்றொரு காவலாளியான அழகேசன் (64) அவர்களை தடுத்தார். பின்னர் காவலாளிகள் இருவரும் காதல் ஜோடியினர் அங்கிருந்து தப்பிச்செல்ல விடாமல் பிடித்து தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பரமேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 2 காவலாளிகளையும் குத்தினார். இதில் சேகருக்கு நெற்றியிலும், அழகேசனுக்கு வயிற்றிலும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அவர்கள் இருவரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.
இது குறித்து வெள்ள கோவில் போலீசில் காவலாளி சேகர் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தன், நூற்பாலை தொழிலாளியான பரமேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து காதல் ஜோடியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story