ஒகி புயலில் சிக்கி மாயமானவர்களை மீட்கக்கோரி தூத்துக்குடியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி நேற்று மாலை தூத்துக்குடியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடிந்தகரையில் ஊர்வலமாக சென்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனைத்து கத்தோலிக்க மீனவ நல கூட்டமைப்பு சார்பில் தெற்கு பீச் ரோடு பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று மாலை இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பெனோ வென்சர் ரோச் தலைமை தாங்கினார். பாதிரியார் தனிஸ்லாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது காணாமல் போனவர்களை மீட்க தேடுதலை தீவிரப்படுத்த வேண்டும். முதல்-அமைச்சர் நேரில் வந்து மக்களை சந்தித்தால் மட்டுமே புயலின் முழு சேதத்தையும், மீனவ மக்களின் இழப்புகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும். மீனவ மக்களுக்கு அறிவித்த நிவாரணங்கள், அவர்கள் பட்ட துயரங்கள் அடிப்படையில் ஏற்புடையதாக இல்லை. ஆகையால் முதல்-அமைச்சர் நிவாரணங்களை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பரதர் நலச்சங்க அவைத்தலைவர் ரோமல்ட், செயலாளர் கனகராஜ், தலைவர் ஜான்சன், பொருளாளர் லியோ ஜான்சன், பரதர் குல இளைஞர் கூட்டமைப்பு தலைவர் ராஜா, பொருளாளர் லியோ, அகில இந்திய பரதர் இளைஞர் பேரவை செயலாளர் சகாய், மாவட்ட மீனவர் சங்க தலைவர் ராஜ், வீராங்கனை அமைப்பு தலைவர் பாத்திமாபாபு, ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் பொன்.தனகரன், ம.தி.மு.க. மீனவர் அணி நக்கீரன், ராஜேந்திரபூபதி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஒகி புயலில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையில் மீனவர்கள் ஏராளமானோர் நேற்று ஊர்வலமாக சென்றனர்.
அவர்கள் இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அப்பகுதி முழுவதும் சுற்றி வந்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
திசையன்விளை அருகே உள்ள கூடுதாழையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்குதந்தை ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ராஜரிகம் முன்னிலை வகித்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story