விசா காலம் முடிந்தும் நைஜீரியா ஜவுளி வியாபாரி கைது


விசா காலம் முடிந்தும் நைஜீரியா ஜவுளி வியாபாரி கைது
x
தினத்தந்தி 11 Dec 2017 4:00 AM IST (Updated: 11 Dec 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

விசா காலம் முடிந்தும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியா ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவர் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

பெங்களூரு,

நைஜீரியாவை சேர்ந்தவர் சண்டே இபோரிகா(வயது 48). இவர், பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு செல்ல முயன்றார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கர்நாடக தொழில்பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஜவுளி வியாபாரம் செய்ய இந்தியா வந்ததும், விசா காலம் முடிந்த பின்னரும் அவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

அதாவது, கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜவுளி வியாபாரம் செய்ய 3 மாத விசாவில் இந்தியா வந்த சண்டே இபோரிகா, அதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அத்துடன், அவருடைய பாஸ்போர்ட்டும் காலாவதியாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தனது நண்பரின் விசா மற்றும் பாஸ்போர்ட்டில் அவருடைய புகைப்படத்தை ஓட்டி மோசடி வேலையில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கைதான சண்டே இபோரிகா விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்டே இபோரிகாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story