ஒகி புயலில் சிக்கி பலியான மீனவரின் உடலை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு


ஒகி புயலில் சிக்கி பலியான மீனவரின் உடலை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Dec 2017 4:00 AM IST (Updated: 12 Dec 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் சிக்கி பலியான மீனவரின் உடலை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்த ரவீந்திரன் மகள் மேனகா, தனது சகோதரி ராஸ்மி மற்றும் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் மேனகா, கலெக்டர் வெங்கடேசிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது தந்தையான மீனவர் ரவீந்திரன் ஓகி புயலில் சிக்கி மாயமானார். எனது தந்தையுடன் கடலுக்கு சென்று புயலில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள், எனது தந்தை கடலில் மூழ்கி இறந்து விட்டதாக கூறுகின்றனர். எனது தந்தை இறந்து விட்டார் என்பது அவர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரின் உடலை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.


Next Story