வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் ஊர் கமிட்டியினர் கலெக்டரிடம் வலியுறுத்தல்
புன்னக்காயல் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என்று ஊர்கமிட்டியினர் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அப்போது, அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் வந்த புன்னக்காயல் ஊர் கமிட்டி நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘புன்னக்காயலில் 10 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தால் எங்கள் பகுதி வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன. அதனை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும். எங்கள் ஊரில் நிரந்தரமாக மின்சார ஒயர்மேன் இல்லை. மழை காலங்களில் மின் விபத்தை தடுக்க எங்கள் பகுதிக்கு ஒயர்மேன் நியமிக்கப்பட வேண்டும். கடல் நீர் மற்றும் வெள்ள நீர் எங்கள் ஊருக்குள் வராமல் இருக்க ஊரை சுற்றி வலிமையான தடுப்பு சுவர் கட்ட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
கொற்கை குடவளநாடார் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘ஆத்தூர் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு வறட்சியாலும், தற்போது சூறாவளி காற்றினாலும் வாழை மரங்களை இழந்து தங்களின் வாழ்வாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்களுக்கு இலவச காப்பீடு வசதி செய்து தர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்டோ கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25-ஆகவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 நிர்ணயம் செய்தது. தற்போது ஆட்டோ ஓட்டுனர்கள் அரசின் உத்தரவை மீறி, குறைந்த பட்சம் ரூ.60 எனவும், அதன் பின்னர் தூரத்திற்கு ஏற்ப அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் மற்றும் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சோதனை நடத்தி, விதிமுறையை மீறி கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோவின் பதிவு சான்றை ரத்து செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் நடந்து வரும் சாலை விபத்துகளை தடுக்க, பாளையங்கோட்டை ரோட்டில் விநாயகர் கோவில் அருகிலும், மீனாட்சிபுரம் சாலையிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலங்கள், சாலைகள், குளங்கள், அணைகள் ஆகியவற்றின் தரம் மற்றும் உறுதியை ஆய்வு செய்து, உண்மை நிலையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணை, விளாத்திகுளம் வைப்பாறு தடுப்பணை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தது.
விளாத்திகுளம் தாலுகா முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிலமோசடியை தடுக்கு நடவடிக்கை எடுக்க கோரி சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘ எங்கள் கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகளுக்கு சொந்தமான இடங்கள், போலி சான்றுகள் மூலம், வேறு நபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற போலி சான்றுகள் மூலம் நிலமோசடி நடப்பதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்ட விரோதமாக நிலம் அபகரிக்கும் நோக்கில் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலங்களை மீட்டு தர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story