நம்பியூர் அருகே பரபரப்பு பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 30 மாணவ, மாணவிகள் காயம்
நம்பியூர் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 30 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தார்கள். பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நம்பியூர்,
நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர், ஆலாம்பாளையம், திருமநாதம்பாளையத்தில் இருந்து தனியார் பள்ளிக்கூட வேன் ஒன்று சுமார் 30 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த வேனை டிரைவர் தங்கராஜ் (வயது 50) ஓட்டினார். ராஜீவ்காந்தி நகர் அருகே நேற்று காலை 9.15 மணி அளவில் சென்றபோது ரோட்டோரத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் வேன் இறங்காமல் இருக்க டிரைவர் லேசாக திருப்ப முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த மாணவ, மாணவிகள் ‘அய்யோ, அம்மா’ என அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மாணவ, மாணவிகளை மீட்டனர். வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி மாணவ, மாணவிகள் 30 பேர் காயம் அடைந்தார்கள்.
விபத்து நடந்ததும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த மாணவ-மாணவிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி, நம்பியூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நம்பியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்துக்குள்ளான வேனை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கினார்கள். பின்னர் காலை 9.30 மணி அளவில் நம்பியூர் பஸ் நிலையம் முன்பு உள்ள ரோடு, ராஜீவ்நகர், திருப்பூர் ரோடு மற்றும் கோவை-நம்பியூர் ரோட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீசார், தாசில்தார் ராணி, கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, ‘டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு வேனை ஓட்டியதே விபத்துக்கு காரணம். போக்குவரத்து விதிமுறையை மீறி செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு பிற்பகல் 3.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story