பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு, கடந்த 1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். செல்போன் கோபுரங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
கோவில்பட்டி,
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு, கடந்த 1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். செல்போன் கோபுரங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். அதன்படி கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த நிறுவனத்தின் முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) அந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
Related Tags :
Next Story