தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 4:45 AM IST (Updated: 13 Dec 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருபாகரன் வரவேற்றார். இதில் முன்னாள் மாநில தலைவர் முருகேசன், முன்னாள் மாநில செயலாளர் தம்பிதுரை, மாநில செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், இணையதள செலவின தொகையை வழங்க வேண்டும். இட மாறுதல் கேட்டு மனு அளித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனே மாறுதல் வழங்க வேண்டும். அம்மா திட்ட செலவின தொகையை வழங்க வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு பழைய நடைமுறையை கடைபிடிக்கும் அரசாணையை வெளியிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை தளர்வு செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை ஊதிய தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன், முன்னாள் மாவட்டதலைவர் வைத்திலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் மதிவாணன், இணைச் செயலாளர் அருண்குமார், பிரசார செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார். 

Next Story