போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு உடலை பிளேடால் கீறி ரவுடி தற்கொலை முயற்சி
விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாக கூறி, ரவுடி ஒருவர் தனது உடலை பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றார்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் என்கிற நெடுஞ்செழியன் (வயது 59). பிரபல ரவுடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் சேத்தியாத்தோப்பு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
இந்த நிலையில் கஞ்சா விற்றதாகவும், திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடலூர் தனிப்பிரிவு போலீசார் ஜான்பீட்டரை கடலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் 2 நாட்கள் விசாரித்து விட்டு விடுவித்தனர். இதற்கிடையே அவரது குடும்பத்தினர் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஜான்பீட்டரை காணவில்லை என புகார் கொடுத்திருந்தனர்.
திருந்தி வாழ முடிவு
இதையடுத்து சேத்தியாத்தோப்பு போலீசார் கஞ்சா வழக்கில் ஜான்பீட்டரை கைது செய்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் ஜான்பீட்டர் திருந்தி வாழ முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்திலும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சேத்தியாத்தோப்பு போலீசார், ஜான்பீட்டரின் வீட்டுக்கு வந்து வழக்கு சம்பந்தமாக விசாரிப்பதற்காக நாளை (அதாவது நேற்று) போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறிவிட்டு சென்றனர். இதனால் ஜான்பீட்டர் மன முடைந்த நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அவர் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர் போலீஸ் நிலையம் முன்பு சென்றபோது திடீரென்று தனது கையில் வைத்திருந்த பிளேடால் உடலில் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர் யாரையும் அருகில் வரவிடவில்லை. அப்போது அவர், நான் கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை செய்யாமல் திருந்தி வாழ முடிவெடுத்திருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து துன்புறுத்துகின்ற னர். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன் என்று கூறி தொடர்ந்து உடலில் பிளேடால் கீறிக் கொண்டிருந்தார்.
பரபரப்பு
அப்போது அங்கு வந்த சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், காமராஜ் மற்றும் போலீசார் ஜான்பீட்டரை தடுத்து அவரது கையில் இருந்த பிளேடை பிடுங்கினர்.
தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். போலீஸ் நிலையம் முன்பு ரவுடி பிளேடால் உடலில் கீறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story