திருமாவளவனை கைது செய்யக்கோரி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருமாவளவனை கைது செய்யக்கோரி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 9:15 PM GMT (Updated: 2017-12-14T00:37:49+05:30)

கோவை மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சியின் எஸ்.சி. அணி சார்பில் டாடாபாத் பவர்ஹவுஸ் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை,

கோவை மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சியின் எஸ்.சி. அணி சார்பில் டாடாபாத் பவர்ஹவுஸ் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு எஸ்.சி. அணி மாவட்ட தலைவர் ஜோதி தலைமை தாங்கி பேசுகையில், ‘இந்து ஆலயங்களை இடித்து விட்டு புத்த விகார்களை கட்ட வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திரமோடியை பற்றி இழிவாக பேசிய மணிசங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் மதன்மோகன், கருமுத்து தியாகராஜன், இளை ஞர் அணி மாவட்ட தலைவர் சுதாகர், தேவ கோவிந்தராஜ், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருமாவளவன், மணிசங்கர் அய்யர் ஆகியோரை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.


Next Story