பவானி ஊராட்சிக்கோட்டை தடுப்பணை மின்வாரிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பவானி ஊராட்சிக்கோட்டை தடுப்பணை மின்வாரிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2017 2:30 AM IST (Updated: 14 Dec 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

பவானி ஊராட்சிக்கோட்டை தடுப்பணை மின்வாரிய சங்கத்தினர் நேற்று காலை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பவானி,

பவானி ஊராட்சிக்கோட்டை தடுப்பணை மின்வாரிய சங்கத்தினர் நேற்று காலை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திட்ட தலைவர் கனகராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

1.12.2015 முதல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும். ஊதிய முரண்பாட்டை நீக்கவேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் வட்டார செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னிலை வகித்தார்.

திட்ட துணை தலைவர் சண்முகம், துணை செயலாளர் பாஸ்கரன் உள்பட சங்கத்தினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.


Next Story