பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள கோபுரங்களை தனியாக பிரித்து துணை நிறுவனம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நியாயமான ஊதிய மாற்றத்தை 1–1–2017 முதல் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புதுவையிலும் அவர்களது போராட்டம் நேற்று 2–வது நாளாக நடந்தது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story