தினக்கூலி, வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தினக்கூலி, வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 10:45 PM GMT (Updated: 13 Dec 2017 8:37 PM GMT)

புதுச்சேரி தினக்கூலி, பகுதிநேர மற்றும் வவுச்சர் ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரி தினக்கூலி, பகுதிநேர மற்றும் வவுச்சர் ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்குழு நிர்வாகிகள் சுமித்ரா, நந்தகோபால், வேதநாயகம், வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

15 ஆண்டுகளுக்கு மேலாக பகுதிநேர மற்றும் தினக்கூலி ஊழியராக பணிசெய்து பதவி உயர்வு கிடைக்காத நிலையில் தற்போது எம்.டி.எஸ். பதவிக்கான நியமன விதியில் உள்ள 25 சதவீத நேரடி நியமனத்தை தளர்த்தி 100 சதவீதம் தினக்கூலி ஊழியர்களை கொண்டு நிரப்பவேண்டும், சுகாதாரத்துறையில் காலியாக 150–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியிடங்களை தினக்கூலி ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும், சம்மேளனம் முன்வைத்துள்ள குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26 ஆயிரத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


Next Story