தமிழ்புலிகள் அமைப்பினர், கடலில் இறங்கி போராட்டம்


தமிழ்புலிகள் அமைப்பினர், கடலில் இறங்கி போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:00 AM IST (Updated: 14 Dec 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்புலிகள் அமைப்பினர், கடலில் இறங்கி போராட்டம்

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர் நேற்று காலை முத்துநகர் கடற்கரையில் கடலில் இறங்கி நின்று போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தாசு தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் வீரபெருமாள், பீமாராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஒகி புயலில் சிக்கி காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆட்டோ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story