அழகு நிலைய ஊழியர் மர்ம சாவு ஏரியில் பிணமாக மிதந்தார்
சேலம் அருகே ஏரியில் அழகு நிலைய ஊழியர் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். அவரை மர்ம ஆசாமிகள் அடித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி,
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் புதுஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. நேற்று காலை புதுஏரியில் ஒரு ஆண் பிணம் மிதந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர், அவர்கள் இதுபற்றி கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சேலம் கன்னங்குறிச்சி முருகன் கோவில் வட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பதும், சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 11-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது மனைவி கலா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மாயமான செந்தில்குமாரை தேடி வந்தனர். ஆனால், நேற்று அவர் புதுஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி கலா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமாருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்து வந்ததாகவும், இதனால் மது அருந்துவதை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுரை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையில் அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து பிணத்தை ஏரியில் வீசி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த செந்தில்குமாருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அழகு நிலைய ஊழியர் ஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story