கிருஷ்ணகிரியில் துணிகரம்: அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இதில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் முதல் மாடியில் உள்ள ஒரு டிராவல்ஸ் அலுவலகம், நிதி நிறுவனம், போட்டோ ஆல்பம், டி.வி. கடை என 4 கடைகளின் பூட்டையும் உடைத்துள்ளனர்.
பின்னர் கடைகளுக்குள் புகுந்து பணம் உள்ளதா? என தேடியுள்ளனர். அதில், டி.வி. கடையில் ரூ.13 ஆயிரம், போட்டோ ஆல்பம் செய்யும் கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடினர். மற்ற 2 கடைகளிலும் பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
நேற்று காலை கடையை திறக்க வந்தவர்கள், கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள், கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடைகளின் பூட்டை உடைக்க பயன்படுத்தப்பட்ட கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட பொருட்கள் அங்கிருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் நிதிநிறுவன அலுவலகம், டிராவல்ஸ் அலுவலக கண்ணாடியில் சாக்பீசால் 98844 23916 என்ற செல்போன் எண் எழுதப்பட்டிருந்தது. இதனை திருடவந்தவர்கள் தான் எழுதி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story