பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் உள்பட 3 பேர் பலி 31 பேர் படுகாயம்


பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் உள்பட 3 பேர் பலி 31 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Dec 2017 11:00 PM GMT (Updated: 13 Dec 2017 9:04 PM GMT)

செய்யாறு அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

செய்யாறு,

வேலூரில் இருந்து நேற்று திண்டிவனம் நோக்கி அரசு பஸ் சென்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா எச்சூர் கிராமத்தின் பாலம் அருகே உள்ள வளைவில் பஸ் சென்றபோது, எதிரே வந்தவாசியில் இருந்து செய்யாறு நோக்கி வந்த தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அரசு பஸ்சில் பயணம் செய்த செய்யாறு தாலுகா பைங்கினர் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் (வயது 60) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் மதியழகன் (50), தனியார் பஸ் டிரைவர் துளசிராமன் (28), கண்டக்டர் புருசோத்தமன் (27), திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வர் இளங்கோவன் (57), குப்பன் (60), பாபு (50), சம்பத் (65), ரவி (45), பெருமாள் (42), விநாயகம் (41), தணிகைமலை (37), சுகன்யா (40), செல்லா (36), துரைசாமி (27), ரமிஜா (35), பிரகாஷ் (24), வந்தவாசி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி விஜயலட்சமி (16), வந்தவாசி நகராட்சி வயர்மேன் வேலுச்சாமி (47) உள்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அரசு பஸ் டிரைவர் மதியழகன் இறந்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 15-க்கும் மேற்பட்டோர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தனசபாபதி, செய்யாறு உதவி கலெக்டர் கிருபானந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story