சாலை பணியாளர்களுக்கு அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும்


சாலை பணியாளர்களுக்கு அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:15 AM IST (Updated: 14 Dec 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

சாலை பணியாளர் களுக்கு அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்று சாலைப்பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு வில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடந்தது. மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட இணை செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மகேந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

காத்திருப்பு போராட்டம்

கூட்டத்தில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசு ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பதவி உயர்வை பறிக்கும் வகை யிலான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 8-வது ஊதியக்குழுவில் அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட தர ஊதியம் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு அரசின் நேரடி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு வருகிற 20-ந்தேதி நடை பெறும் காத்திருப்பு போராட்டத்தில் குடும்பத்தினருடன் பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார். 

Next Story