அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கட்டிட சிலாப் காரை இடிந்து விழுந்து டிரைவர் காயம்
திருப்பூரில் உள்ள அரசு பணிமனையின் சிலாப்காரை இடிந்து விழுந்ததில் டிரைவர் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் உடனடியாக கட்டிடத்தைசீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இயக்கப்படுகிறது. இதில் ஏராளமான பணிமனை ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அன்புசெல்வம் என்ற டிரைவர், பணிக்காக அங்கு வந்துள்ளார். அவர் அங்குள்ள பொருட்கள் வைக்கும் அறை வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது வாசல் நிலையில் மேல் உள்ள சிமெண்ட் சிலாப்காரை திடீரென இடிந்து அன்புசெல்வத்தின் மீது விழுந்துள்ளது. இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்த பிற ஊழியர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பணிமனை ஊழியர்கள் கூறியதாவது:-
கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் உள்ள அரசு பணிமனை ஊழியர்கள் ஓய்வறை இடிந்து விழுந்ததில் பலர் இறந்தனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து அரசு பணிமனை கட்டிடங்களையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசும், போக்குவரத்து கழகமும் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பல பணிமனைகள் பழுதடைந்து, கூரைகளில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும், சுவர்களில் கீறல்கள் விழுந்த நிலையிலும் காணப்படுகிறது. இது போல, திருப்பூர் பணிமனைக்குட்பட்ட கட்டிடங்களும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. நல்ல வேளையாக அன்புசெல்வம் காயத்துடன் தப்பித்துள்ளார். உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. கட்டிடத்தில் பல பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே உள்ளது. நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்று திருப்பூரில் ஏற்படுவதற்கு முன்பே பணிமனையில் புதிய கட்டிடங்கள் கட்டி ஊழியர்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story