ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
அரசு போக்குவரத்து கழகங்களின் வரவை விட செலவு அதிகரித்துள்ளதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை நிதியை அரசே வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பற்றாக்குறையை சரிசெய்ய தொழிலாளர்களின் ஓய்வூதிய தொகை, சேமிப்பு தொகையை எடுத்து அரசு செலவு செய்து வருகிறது.
இதன்காரணமாக ஓய்வூதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு ஆகியவை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த மே மாதம் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஓய்வூதிய பலன் கள் உள்ளிட்டவற்றை வழங்க அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனை கண்டித்து நேற்று திண்டுக்கல் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதற்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல செயலாளர் சென்றாயன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மண்டல செயலாளர் ராஜாராம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், அண்ணா தொழிற் சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இருப்பினும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயக்கப்பட்டன.
நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையொட்டி, திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story