கும்பகோணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு 2 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று கும்பகோணம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் மணிமாறன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் மதிவாணன், ஐ.என்.டி.யூ.சி. நிறுவனர் கலியன், எச்.எம்.எஸ். பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணப்பயன்களை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும், பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஐ.என்.டி.யூ.சி. பேரவை தலைவர் வைத்தியநாதன், பாட்டாளி சங்க மாநில துணை செயலாளர் அரங்க.நாகப்பன், தே.மு.தொ. சங்க தலைவர் சீனிவாசன், அம்பேத்கர் சங்க பேரவை பொதுச்செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story