பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2017 4:32 AM IST (Updated: 15 Dec 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயலும் சமூக விரோதிகளை கண்டித்தும், ஆம்பூர் சாலையில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி விடுதலை சிறுத்தைகள் கட்சி அமுதவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி யூனியன் தலித் பாதுகாப்பு இயக்க துணைத்தலைவர் பாஸ்கர், பெரியார் சிந்தனையாளர் இயக்க தலைவர் தீனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்மாறன், மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story