கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலி


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலி
x
தினத்தந்தி 15 Dec 2017 5:23 AM IST (Updated: 15 Dec 2017 5:23 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலியானார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது28). கோவில் பூசாரி. இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்கு தர்சித் (2) என்ற மகன் உள்ளான்.

நேற்று முன்தினம் மாலை கன்னிப்புத்தூர் கிராமத்திற்கு சென்று விட்டு ஒரே மோட்டார்சைக்கிளில் வினோத்குமார், அவரது தாய் சாந்தி (55), மனைவி புவனேஸ்வரி மற்றும் மகன் தர்சித் ஆகியோர் திரும்பி கொண்டிருந்தனர். கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும்போது சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் புவனேஸ்வரி, சாந்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.



Related Tags :
Next Story