ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடித்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்–மந்திரி பதவி
தேர்தலில் வெற்றிபெற்று ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடித்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்கப்படும் என்று தேவேகவுடா கூறினார்.
மைசூரு,
பின்னர் அவர் நஞ்சன்கூடுவில் நடந்த ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெறும். வெற்றிபெற வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். சிலர் தற்போது கட்சியை விட்டு விலகி விட்டார்கள். அதைப்பற்றி நானோ, எங்கள் கட்சியினரோ கவலைப்பட மாட்டோம்.எங்கள் கட்சியை விட்டு விலகி சென்றவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கண்டிப்பாக எங்கள் கட்சி சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவார். நஞ்சன்கூடு தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவாளர் இருந்தார். அவர்தான் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரசார் அவரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். இதனால் கடந்த இடைத்தேர்தலில் நஞ்சன்கூடுவில் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது.
அடுத்த ஆண்டு நடைபெற தேர்தலில் நஞ்சன்கூடுவில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் புதிய வேட்பாளர் களத்தில் இறக்கப்படுவார். அந்த வேட்பாளரை குமாரசாமி தேர்ந்தெடுக்க உள்ளார். ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை பிடித்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்குவேன், அதன்மூலம் தலித் சமுதாயத்தினரை பெருமைப்படுத்துவேன் என்று ஏற்கனவே குமாரசாமி சொல்லி இருக்கிறார்.அவர் சொன்னது உண்மைதான். கண்டிப்பாக தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு துணை–முதல் மந்திரி பதவி வழங்கப்படும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story