7 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 7 பேர் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்று உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 7 பேர் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இதே போன்று 5 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பதவி உயர்வு
மாவட்டத்தில் பணியாற்றி வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 7பேருக்கு, துணைதாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, விளாத்திகுளம் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தூத்துக்குடி ஆனந்த், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலக கண்காணிப்பாளராகவும், ஓட்டப்பிடாரம் கருப்பசாமி, கயத்தார் வட்டவழங்கல் அலுவலராகவும், தூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஜானகி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார்–1 ஆகவும், சாத்தான்குளம் சுல்தான் ஜலாலுதீன் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராகவும், கயத்தார் சுடலைமணி, கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலராகவும், கோவில்பட்டி சுபா விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.
இடமாற்றம்
இதே போன்று தூத்துக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் சுந்தரராகவன், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலக கண்காணிப்பாளர் லட்சுமிகணேஷ் ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தாராகவும், கயத்தார் வட்ட வழங்கல் அலுவலர் திரவியம், விளாத்திகுளம் மண்டல துணை தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் முரளி, பறக்கும்படை தனித்துணை தாசில்தாராகவும், துணைதாசில்தார் கைலாச குமாரசாமி, திருச்செந்தூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story